25 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

வேளச்சேரியில் நெகிழ்ச்சி: தூய்மைப் பணியாளர்களுக்கு சொகுசு உணவகத்தில் அறுசுவை சைவ விருந்து!

13 அக் 2026 · பிற்பகல் 7:44 · 👁 67 பார்வைகள்  · 
பகிர்
✍️ செய்தியாளர்: ராஜ் குமார்

சென்னை மாநகரத்தின் தூய்மைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவிக்கும் விதமாக, சென்னை வேளச்சேரியில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு.

சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், அப்பகுதியில் பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உயர்தர தனியார் உணவகத்தில் பிரம்மாண்ட சைவ விருந்து வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

6-வது ஆண்டாகத் தொடரும் மனிதநேயம்:

சென்னை மாநகராட்சி மண்டலம் 13, வார்டு 176-க்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களின் சேவையை பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தங்களின் பகுதியில் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவிப்பதை இந்த அசோசியேஷன் வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 6-வது ஆண்டாக இத்தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் வேளச்சேரியில் உள்ள உயர்தர சொகுசு உணவகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அசோசியேஷனின் செயலாளர் கீதா கணேஷ் இந்தச் சிறப்பு நிகழ்வினை முன்னின்று முழுமையாக ஒருங்கிணைத்திருந்தார்.

தாமாக முன்வந்து பரிமாறிய சிறப்பு விருந்தினர்கள்:

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சுமீத் எல்கோ நிறுவனத்தின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் முகமூத் சைத் மற்றும் ப்ராஜெக்ட் மேனேஜர் குருசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் தூய்மைப் பணியாளர்களுடன் அமர்ந்து, அவர்களுக்கு உணவுகளைத் தங்கள் கைகளால் பரிமாறி தங்களது அன்பையும் மரியாதையையும் செலுத்தினர்.

நெஞ்சம் நெகிழ்ந்த பணியாளர்கள்:

விருந்தில் பங்கேற்று அறுசுவை உணவை மகிழ்வோடு உண்ட தூய்மைப் பணியாளர்கள் தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

"தினமும் வெளியில் இருந்து குப்பைகளை அகற்றும் போது, இதுபோன்ற பெரிய உயர்தர உணவகங்களுக்குள் சென்று நம்மால் சாப்பிட முடியுமா என்று ஏங்கியிருக்கிறோம். எங்களின் அந்த நீண்ட நாள் கனவு இன்று நனவாகியுள்ளது" என்று உணர்ச்சிப் பெருக்குடன் அவர்கள் தெரிவித்தனர்.

தங்களை சமுதாயத்தில் உயரிய இடத்தில் வைத்து அழகு பார்த்த ஏஜிஎஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கத்தினருக்கு தூய்மைப் பணியாளர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். எளிய மனிதர்களின் உழைப்பை மதிக்கும் இதுபோன்ற அசோசியேஷனின் செயல்கள் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

முதல் கருத்தை நீங்களே பதிவிடுங்கள்!

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad