வேளச்சேரியில் பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்கள்.
✍️ செய்தியாளர்: ச சாந்த குமார்

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல். காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் இளைஞர்கள் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் ரேசில் ஈடுபட்டு அதிவேகமாக செல்கின்றனர்.
தீபாவளி பண்டிகை நேரத்தில் பொது மக்கள் பலர் பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்க வெளியில் குடும்பம் குடும்பமாக வரும் வேளையில் இது போன்று பைக் ரேசில் ஈடுபடும் இளைஞர்களால் பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.
போக்குவரத்து காவல்துறையினர் விதிமுறைகளை பின்பற்றாமல் ரேசில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்களை பிடித்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.