வேளச்சேரியில் பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழப்பு.
✍️ செய்தியாளர்: ச சாந்த குமார்

சென்னை வேளச்சேரி போக்குவரத்து காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தவர் ரமேஷ் சவரிமுத்து(51), இவர் 1997 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
வழக்கம் போல் பணிக்கு வந்து ரோந்து வாகன பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது அவருக்கு நெஞ்சில் லேசான வலி இருப்பதாக ஓட்டுநரிடம் கூறியுள்ளார், அதனையடுத்து அவரும் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சையில் அவருக்கு இதய அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவி்த்துள்ளனர், உறவினர்கள் வந்து வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
பணியின் போது போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.