சென்னை OMR சாலையில் Raptee.HV நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையம்
✍️ செய்தியாளர்: க ராஜ்குமார்

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்தியாவின் முன்னணி உயர் மின்னழுத்த (High-Voltage) மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Raptee.HV, சென்னை OMR சாலையில் நிறுவியுள்ள தனது புதிய முதன்மை அனுபவ மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் 11 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மணப்பாக்கத்தில் செயல்படும் இந்நிறுவனம், தமிழ்நாட்டிலுள்ள MIT (குரோம்பேட்டை) மற்றும் NIT (திருச்சி) பொறியியல் கல்லூரிகளில் பயின்று, Tesla மற்றும் Wipro போன்ற சர்வதேச வாகனத் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழகத் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டதாகும். மின்சார கார் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் இந்நிறுவனம், தனது பிரத்யேக HV-TEC தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கி, அதன்மூலம் இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிளான 'T30'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 240V உயர் மின்னழுத்தக் கட்டமைப்பைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், மின்சார கார்களுக்கான CCS2 பொது DC விரைவு மின்னேற்ற தரநிலையுடன் இணக்கத்தன்மையைக் கொண்டுள்ளது சிறப்பம்சமாகும்.
வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில், ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழிற்சாலை விற்பனை மையத்திலிருந்து மேம்படுத்தப்பட்டு இந்தப் புதிய அனுபவ மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிளை நேரில் பார்வையிடுவதுடன், அதன் நவீன தொழில்நுட்பங்களை நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் கலந்துரையாடி அறிந்து கொள்ளவும், சோதனை ஓட்டம் (Test Ride) மேற்கொண்டு அதன் செயல்திறனை நேரில் உணரவும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் த. கார்த்திகேயன், ஆகியோர் பங்கேற்றனர். மேலும், ரேப்டீ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (Raptee Energy Private Limited) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தினேஷ் அர்ஜுன், இணை நிறுவனர்கள் ஆர். கீர்த்திவாசன், ஏ. கார்த்திகேயன், புனித் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.