24 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

கிண்டி மடுவின்கரை மேம்பால போக்குவரத்து சிக்னல் கம்பம் கீழே சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

17 நவ 2026 · பிற்பகல் 9:04 · 👁 46 பார்வைகள்  · 
பகிர்
✍️ செய்தியாளர்: சாந்த குமார் ச
ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம்
ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம்

வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் முன் சரி செய்ய கோரிக்கை.

சென்னை கிண்டி மடுவின்கரை மேம்பாலம் அருகே கீழ் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த மேம்பாலம் பல பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது, குறிப்பாக வேளச்சேரி, ரேஸ் கோர்சில் இருந்து கிண்டி கத்திபாரா செல்லும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தை தான் பயன்படுத்த வேண்டும்.

காலை மற்றும் மாலை பீக் ஹவர்ஸ் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மேம்பாலம் சந்திப்பில் வாகனங்கள் சிக்கிக் கொண்டு கடந்து செல்ல 10 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக செல்லும் நிலை உருவாகிறது.

இது போன்ற முக்கிய சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் சாய்ந்து ஒரு மாத காலமாக அப்படியே உள்ளது இதனை போக்குவரத்து காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகையால் உடனடியாக சாய்ந்த நிலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பத்தை அகற்றி, புதிய கம்பத்தை வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

முதல் கருத்தை நீங்களே பதிவிடுங்கள்!

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad