24 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் போனஸ் வழங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை.

03 நவ 2026 · முற்பகல் 11:42 · 👁 452 பார்வைகள்  · 
பகிர்
✍️ செய்தியாளர்: சாந்த குமார் ச
தீபாவளி பண்டிகை கால முன்பணக்கடன், போனஸ் தவெக ஆட்சியிலாவது கிடைக்குமா?

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் ஏக்கம் :

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தீபாவளி பண்டிகை நவம்பர் 8 அன்று கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 15 ஆண்டுகளாக தற்காலிகமாக பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தொழிற்கல்வி பாடங்களில் பணிபுரிகின்ற 11,773 குடும்பங்கள் தீபாவளி கொண்டாடும் வகையில் போனஸ், பண்டிகை கால முன்பணக்கடன் தவெக ஆட்சியிலாவது வழங்க வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

புத்தாடை, பட்டாசு, இனிப்பு பலகாரங்கள் உள்ளிட்ட குடும்ப செலவுகளுக்கு தமிழ்நாடு அரசின் உதவியை பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் குடும்ப செலவினத்தைச் சமாளிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பண்டிகை கால முன்பணக்கடனாக ரூ. 20 ஆயிரம் தற்போது அளித்து வருகிறது.

இக்கடன் ஒரு ஆண்டில் ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது.

மேலும், இக்கடனுக்கு வட்டி கிடையாது.

பத்து மாதம் தவணைகளாக இது மாத ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றது.

இதைப்போலவே, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பண்டிகை முன்பணக்கடன் வழங்கி அதனை மாத சம்பளத்தில் தவணை முறையில் பிடித்தம் செய்ய வேண்டும்.

இதை தவெக அரசு செய்தால் வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படுவதில் இருந்து பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் விடுபடும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தி உள்ளார்.

15 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் இந்த முறையாவது வழங்கி தற்போதுள்ள 11,773 குடும்பங்களின் ஏக்கத்தை முதல்வர் விஜய் போக்க வேண்டும்.

மேலும், நடப்பு நவம்பர் மாதம் வழங்க வேண்டிய சம்பளம் ரூ. 15 ஆயிரம் சம்பளத்தை முன்கூட்டியே வழங்கி பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் தீபாவளி கொண்டாட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து முதல்வர் விஜய் பள்ளிக்கல்வித்துறைக்கு ஆணையிட வேண்டும்.

மேலும் 5 ஆண்டுகள் பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தவெக தேர்தல் வாக்குறுதிபடி உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கு அரசு கொள்கை முடிவு எடுத்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கருத்துகள் (4)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

B
bharathi dasan 03 நவ 2026 · பிற்பகல் 8:56

Ranipet, thirupathur only. Vellore ok

B
bharathi dasan 03 நவ 2026 · பிற்பகல் 8:56

First part teacher ra epf data koduka soluinka vellore, salem

G
Govinthan Jaganathan 03 நவ 2026 · முற்பகல் 11:52

தீபாவளி கடன் போனஸ் கொடுத்தால் எங்கள் குடம்பம் மிகவம் நல்லா இருக்கு சார்

G
Govinthan Jaganathan 03 நவ 2026 · முற்பகல் 11:50

முதலவர் பணிநிறந்தரம் செதல் கோடி புண்ணியம்

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad