வேளச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி.
✍️ செய்தியாளர்: சாந்த குமார் ச

தீபாவளி, புத்தாடை வாங்க குவியும் மக்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலை, வேளச்சேரி பிரதான சாலை, கைவேலி மேம்பாலம் உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் ஆமை வேகத்தில் நகர்ந்து செல்கின்றனர்.
வார இறுதி நாள், மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடை வாங்க மக்கள் அதிகளவில் வெளியில் செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலால் இந்த பகுதிகளை கடந்து செல்ல சுமார் 30 லிருந்து 40 நிமிடங்கள் வரை தாமதமாகிறது.
போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.