24 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது

26 அக் 2026 · பிற்பகல் 4:58 · 👁 115 பார்வைகள்  · 
பகிர்
✍️ செய்தியாளர்: சாந்த குமார் ச
கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ்
கைது செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ருபாய் லஞ்சம் வாங்கியதாக வழக்கு

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்ட ரூ. 100 கோடி மோசடி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதின் பின்னணி புகார்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல், சிஎம்டிஏ (CMDA) மற்றும் டிடிசிபி (DTCP) அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சான்றிதழ்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் மேல் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாகப் புகார் எழுந்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த ஊழல் தடுப்புச் சட்ட வழக்கைப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் சுமார் 177 தனியார் பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு

இந்த வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது முன்ஜாமீன் மனுவை இன்று தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவிட்டது.

நீதிமன்றம் முன்ஜாமீனை நிராகரித்த சில மணி நேரங்களிலேயே போலீசார் இந்த அதிரடி கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தற்போதைய நிலை

சென்னையில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், அவர் இருந்த பகுதியில் ஏராளமான திமுகவினர் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கின் முழு விவரம்

2026 ஜூன் 27: சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. முதற்கட்டமாக, இந்த மோசடிக்கு இடைத்தரகர்களாகச் செயல்பட்ட பி.டி. அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது அன்பில் மகேஷ் கைது செய்யப்படவில்லை.

2026 செப்டம்பர் 16: கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் கொடுத்த வாக்குமூலம் மற்றும் பணப் பரிவர்த்தனை ஆதாரங்களின் அடிப்படையில், அன்பில் மகேஷ் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது இல்லங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

2026 செப்டம்பர் 18: சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அன்று அவரிடம் போலீசார் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு அவர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

2026 அக்டோபர் 26: கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவு வந்த சில மணி நேரங்களிலேயே, சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் அவரை முறையாகக் கைது செய்தனர்.

கருத்துகள் (0)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

முதல் கருத்தை நீங்களே பதிவிடுங்கள்!

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad