24 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

வேளச்சேரியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்து.

25 அக் 2026 · முற்பகல் 1:28 · 👁 96 பார்வைகள்  · 
பகிர்
✍️ செய்தியாளர்: சாந்தகுமார் ச
விபத்துக்குள்ளான கார் படத்தில் காணலாம்
விபத்துக்குள்ளான கார் படத்தில் காணலாம்

கார் முற்றிலும் சேதம், காரில் வந்த இருவரில் ஒருவருக்கு லேசான காயம்.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் தூக்கி வீசப்பட்டு காரில் இருந்த இருவரில் அப்துல் அமித்(20), என்பவருக்கு மட்டும் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

காரின் ஏர் பலூன் இருவரையும் காப்பாற்றியது, இதில் காரின் முன்பக்க சக்கரம் உடைந்து, கார் நகர முடியாமல் சாலையின் நடுவே சிக்கிக் கொண்டது.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வேளச்சேரி போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்து, காரை அப்புறப்படுத்தினர்.

காயமடைந்த நபரையும் அருகில் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தி, வீ்ட்டில் உள்ளவர்களுக்கு தகவலை தெரிவித்தனர்.

காரை அதிவேகமாக இயக்கி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் (0)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

முதல் கருத்தை நீங்களே பதிவிடுங்கள்!

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad