புனித யூதா ததேயுவின் திருத்தல பெருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
✍️ செய்தியாளர்: திருஞான சம்மந்த மூர்த்தி

கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.
சென்னை நங்கநல்லூர் அடுத்த வாணுவம்பேட்டையில் உள்ள திருத்தூதர் புனித யூதா ததேயு திருத்தலத்தின் 49-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இவ்விழா அக்டோபர் 22 முதல் - 25 வரை நான்கு நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இன்று மாலை 6 மணிக்கு புனிதரின் சிறப்பு நவநாள் ஜெபமாலையுடன் தொடங்கியது. "எல்லோருக்கும் இறைவனின் அருள் வேண்டும்" என்ற நோக்கத்துடன் மாலை 6:30 மணிக்கு திருத்தூதர் யூதாவின் கொடியேற்றி சிறப்பு திருபலி நடைபெற்றது.
அக்டோபர் 23, 2026 (வெள்ளிக்கிழமை) மாலை 6:00 மணிக்கு திருஜெபமாலையுடன் தொடங்கி,
6:30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி, சிறப்பு நற்கருணை ஆராதனை, நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அப்ப வடிவான இறைவன் நம் அனைவருக்கும் நிறைவாழ்வு அளிக்கும் தலைவன். என்ற நோக்கத்துடன் நற்கருணை பெருவிழா நடைபெறுகிறது.
அக்டோபர் 24, 2026 (சனிக்கிழமை) –
மாலை 6:00 மணிக்கு திருஜெபமாலையுடன் தொடங்கி, மாலை 6:30 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி, திருத்தேர் மந்திரிப்பு, வண்ணமயமான திருத்தேர் பவனி விழா நடைபெறுகிறது. 'ததேயுவின் தேர் பவனி துயர் போக்கும் அருள் பவனி" என்ற நோக்கத்துடன் திருத்தேர் திருவிழா நடைபெறுகிறது.
அக்டோபர் 25, 2026 (ஞாயிற்றுக்கிழமை)
காலை 8:30 மணிக்கு ஆடம்பர திருப்பலி.
காலை 11:00 மணிக்கு ஆங்கில திருபலி நடைபெறுகிறது.
மாலை 6:00 மணிக்கு ஆடம்பர நன்றி திருப்பலி, அதை தொடர்ந்து கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியை திருத்தல அதிபர் மற்றும் பங்குத் தந்தை அருள்முனைவர் இ. அந்தோணி ராஜ், உதவி அதிபர் அருள்தந்தை அலெக்ஸ் ஸ்டாலின் குமார், அருட்சகோதரிகள், பொறுப்பாளர்கள், நிதிக்குழு உறுப்பினர்கள், இளையோர் இயக்கம், பக்த சபையினர் மற்றும் பங்கு இறைமக்கள் ஏற்பாடு செய்கின்றனர்.