25 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

படப்பை அருகே புதுச்சேரி மதுபானங்கள் வீட்டில் பதுக்கி வைப்பு.

18 அக் 2026 · முற்பகல் 10:51 · 👁 75 பார்வைகள்  · 
பகிர்
✍️ செய்தியாளர்: சாந்த குமார் ச
கைது செய்யப்பட்டவரை படத்தில் காணலாம்
கைது செய்யப்பட்டவரை படத்தில் காணலாம்

100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மூர்த்தி(52), இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம், சிவசக்தி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.

தனது வீட்டில் புதுச்சேரி மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த ரகசிய தகவலின் பேரில், துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் படி, மணிமங்கலம் போலீசார் மாடம்பாக்கம் சிவசக்தி நகரில் உள்ள மூர்த்தியின் வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில், சுமார் 1500 ரூபாய் மதிப்பு கொண்ட பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மூர்த்தியை கைது செய்து மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அவருக்கு இந்த மதுபானங்கள் எப்படி கிடைத்தது? இதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கருத்துகள் (0)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

முதல் கருத்தை நீங்களே பதிவிடுங்கள்!

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad