24 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

தீபாவளிக்குள் ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்படும் அமைச்சர் உறுதியளித்தார்.

15 அக் 2026 · பிற்பகல் 7:05 · 👁 915 பார்வைகள்  · 
பகிர்

அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் வெற்றி.

தமிழகத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட லட்சக்கணக்கான ஓட்டுநர் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரியும், மறைந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது இப்ராகிம் அவர்களின் மறைவுக்கு நீதி கேட்டும் இன்று அனைத்து ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது .

இப்போராட்ட நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் மாண்புமிகு தி.வேல்முருகன் EX.MLA அவர்கள் நேரில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்வாதாரத்திற்க்காக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பிறகு தமிழக அரசின் சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் உடன்பாடு ஏற்பட்டது.

கோரிக்கையும் அமைச்சரின் வாக்குறுதியும்:

போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் வரும் தீபாவளிக்குள் ஆட்டோ மீட்டர் கட்டணம் முறைப்படி மறுநிர்ணயம் செய்யப்படும் என்று திட்டவட்டமாக உறுதியளித்தார்.

மேலும், ஓட்டுநர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த உறுதியான வாக்குறுதியை ஏற்று, நிர்வாகிகளுக்கு அமைச்சர் தண்ணீர், இனிப்புகள் வழங்கி நிர்வாகிகளின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இப்பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத் தலைவர்கள்:
அ.ஜாஹிர் ஹுசைன், இரா.வெற்றிவேல், டில்லி பாபு
உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைத்து ஓட்டுநர் தோழர்களுக்கும்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில்
நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

அறிக்கை வெளியிட்டவர்:

அ.ஜாஹிர் ஹுசைன்
செயல் தலைவர்,
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்.

கருத்துகள் (10)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

A
Ashok Kumar 16 அக் 2026 · முற்பகல் 5:12

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மேற்கொண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

R
R RAJENDRAN 15 அக் 2026 · பிற்பகல் 11:24

போனாட்சியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விடியல் கிடைக்கவில்லை தற்போது உள்ள வெற்றி கழகம் ஆட்சியில ஆட்டோ ஓட்டுநர் வாழ்வாதாரம் வெற்றியாய் இருக்கும் என்று நம்புகிறோம் இந்தப் போராட்டம் கடைசி போராட்டமாக இருக்கட்டும் என்று நம்புகிறோம் போக்குவரத்து துறை அமைச்சர் இன்று கூறியது போல் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இனிய தீபாவளியை தங்களுடைய வாக்குறுதி அமையட்டும் நன்றி வணக்கம் வட சென்னை ஆட்டோ பிரிவு

B
Baskaran 15 அக் 2026 · பிற்பகல் 10:08

இது அனைத்து ஓட்டுனர்களுக்கும் ஒரு நல்ல செய்தி உண்மையான முடிவு கிடைக்கும் வரை அரசருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் போது முழு வெற்றி கிடைக்கும் இன்று நமக்காக போராட்ட களத்தில் தோளோடு தோல் நின்று போராடிய அனைத்து ஓட்டுநர் சொந்தங்களுக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்

முக்கியமாக இதற்காக தொடர்ந்து போராடிவரும் உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்க தலைவர் சுடர் வேந்தன் மற்றும் செயல் தலைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

K
Kumaresan 15 அக் 2026 · பிற்பகல் 8:37

ஆட்சியில் யாராக இருந்தாலும் பாதிக்க படுவது ஓட்டுநர்களே!!!

Y
yogaraj 15 அக் 2026 · பிற்பகல் 8:06

நம் தோழர்கள் அனைவருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி
இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து நிலை ஓட்டுநர் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

A
A.Basha 15 அக் 2026 · பிற்பகல் 7:55

படிப்படியாக ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை குறி வைத்து இலவசங்களை அள்ளி வீசும் இந்த அரசு நாட்டின் முதல் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் கஷ்டத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேலும் அதே போல் நாட்டின் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தாமல் அவர்களின் பதவி ஆசைக்கும் பண இச்சைக்கும் நாடு நாடாக சென்று அவர்களின் பணப் பதுக்களை தொடர்ச்சியாக செய்து கொண்டே தான் இருக்கிறது ஆனால் ஒரு சாமானிய விவசாயி மற்றும் ஓட்டுனரின் வாழ்வாதாரத்தை பற்றி என்றுமே கனவில் கூட நினைத்தது பார்த்ததுண்டோ என்று என்னுடைய ஒரு கேள்வி குறி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழகமெங்கிலும் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் அனைத்து உறவுகளும் தினமும் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் இது மாற்று கருத்து இல்லாத 100 சதவீத உண்மை####

S
Siranjeevi Raji 15 அக் 2026 · பிற்பகல் 7:54

அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி

K
K.KUMAR 15 அக் 2026 · பிற்பகல் 7:50

போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைத்து ஓட்டுனர் தொழிற்சங்கங்களுக்கு உரிமை குரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்டோ பிரிவு சார்பாக மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்

S
Sundararajan 15 அக் 2026 · பிற்பகல் 7:24

தீபாவளிக்குள் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவேன் என்று வாக்குறுதி கொடுத்த போக்குவரத்து துறை அமைச்சர் திரு.விஜய தமிழன் பார்த்திபன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
போராட்டத்தை வெற்றி பெற செய்த அனைத்து ஓட்டுநர் உறவுகளுக்கு
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் வடசென்னை கார் பிரிவு சார்பாக மனமார்ந்த நன்றிகள்
புரட்சிகர வாழ்த்துக்கள்

P
P.மகேந்திரன் 15 அக் 2026 · பிற்பகல் 7:24

அரசு சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள்ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்குள்அனைத்தும் சரி செய்யப்படும்என்று வாப்பொழுதி அளித்த அமைச்சர் அவர்களுக்குஉரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad