24 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

தொழிலதிபரிடம் கடன் வாங்கியும் ஏலசீட்டு நடத்தியும் 20 லட்சம் வரை மோசடி.

13 அக் 2026 · பிற்பகல் 3:40 · 👁 720 பார்வைகள்  · 
பகிர்

சென்னையில் தொழிலதிபரிடம் கடன் வாங்கியும் ஏலசீட்டு நடத்தியும் 20 லட்சம் வரை மோசடி செய்த நபர் மீது வழக்குப் பதிவு.

சென்னை மேற்கு மாம்பலம் அனுமன் கோயில் தெருவை சேர்ந்தவர் தொழிலதிபர் பேரின்பராஜா ரமேஷ்(56), இவரது உறவினரான ஸடாலிங் மகன் ஜியோசுகன் என்பவர் கடந்த 2023ம் ஆண்டு நேரில் அணுகி இடம் வாங்க 20 லட்சம் ரூபாய் பணம் தேவைபடுவதாகவும் லோன் வர தாமதமாவதால் கடனாக பணம் தருமாறும், லோன் கிடைத்தவுடன் திருப்பி தருவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார்.

பின்னர் நீண்ட நாட்களாகியும் பணம் தராமல், 2025ம் ஆண்டு 2 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தார். அதன் பின் அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஏலசீட்டு நடத்த உள்ளதாகவும், சீட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார். அதனை நம்பி இரண்டு 10 லட்சம் ரூபாய் சீட்டு போட்டு அதில் சுமார் 7.5 லட்சம் வரை பணம் கட்டியுள்ளார். ஒரு சீட்டு பணத்தை எடுத்தும் அதற்கும் பணம் தரவில்லை, மூன்று தவணைகளாக தலா 2 லட்சம் வீதம் 6 லட்சம் திருப்பிக் கொடுத்தார்.

கடந்த சில மாதங்களாக பணம் தராததால் போன் செய்து கேட்ட போது இனி போன் செய்து பணம் கேட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டி ஆபாசமாக திட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சூப்பர் மார்கெட் உரிமையாளரும் தொழிலதிபருமான பேரின்பராஜா ரமேஷ், அசோக் நகர் காவல் நிலையத்தில் 19,54,200 ரூபாய் பணத்தை திருப்பி தராமல் கொலை மிரட்டல் விடுப்பதாக ஜியோசுகன் மீது புகார் அளித்தார்.

புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீசார்​ மோசடி, கொலை மிரட்டல் ஆபாசமாக திட்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மோசடி பேர்வழியான ஜியோசுகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கருத்துகள் (0)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

முதல் கருத்தை நீங்களே பதிவிடுங்கள்!

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad