24 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

அடையாரில் பட்டப் பகலில் பயங்கரம் தந்தை கண் முன்னே ரவுடி வெட்டி கொலை பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்

27 அக் 2026 · பிற்பகல் 2:30 · 👁 119 பார்வைகள்  · 
பகிர்
✍️ செய்தியாளர்: சாந்த குமார் ச
படுகொலை செய்யப்பட்ட மைத்ரேயன்.
படுகொலை செய்யப்பட்ட மைத்ரேயன்.

காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு ஆட்டோவில் திரும்பிய போது சம்பவம்.

சென்னை அடுத்த மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால் இவரது மகன் மைத்ரேயன்(21), சி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளியான மைத்ரேயன் கஞ்சா வழக்கில் கைதாகி கடந்த 21ஆம் தேதி தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

22 ஆம் தேதி முதல் தினமும் காலை 10:30 மணிக்கு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துட்டு வந்தார்

ராமகிருஷ்ணபுரத்தில் எதிரிகள் அதிகமானதால் திருவான்மியூர், மற்றும் ராயபுரத்தில் உள்ள உறவினர் வீடுகளில் மாறி, மாறி தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று தந்தை வேணுகோபாலுடன், (ஆட்டோ ஓட்டுநர்) ஆட்டோவில் சென்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு அடையார் இந்திரா நகரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் ஆட்டோவை வழிமறித்து, வேணுகோபால் கண் முன்னே அவரது மகன் மைத்ரேயனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

தகவலறிந்த அடையார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கடந்த 2025 ஆம் ஆண்டு மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ஜீவா என்பவரை, வெட்டிய வழக்கில் மைத்ரேயன் முக்கிய நபராவார்.

இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே ஜீவா தலைமையிலான கும்பல் கொலை செய்ததா? அல்லது வேறு கும்பலா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

சம்பவம் நடந்த இடம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள நபர்களின் உருவங்கள், வாகன பதிவெண்களை கொண்டு கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்ட பகலில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

முதல் கருத்தை நீங்களே பதிவிடுங்கள்!

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad