24 நவ 2026 TAMIL MAGAZINE | WEB தமிழ் / EN
விளம்பரம்
விளம்பரம்
⚡ முக்கியச் செய்திகள்
"மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦  "மாற்றத்தின் குரல்" தமிழ் மாத இதழ் விரைவில் வெளியாக உள்ளது, வாங்கி படியுங்கள்! ஆதரவை தாருங்கள்!  ✦  மாற்றத்தின் குரல் இணையதளம் இப்போது நேரலையில்!  ✦ 

பள்ளிக்கரணையில் இளைஞரை கடத்தி மிரட்டி 9500 ருபாய் பணம் வழிப்பறி.

21 அக் 2026 · பிற்பகல் 9:32 · 👁 107 பார்வைகள்  · 
பகிர்
✍️ செய்தியாளர்: சாந்த குமார் ச
படத்தில் கைது செய்யப்பட்டவர்கள்
படத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

ஏராளமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.

சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அறை எடுத்து தங்கி வருபவர் அஜய்(21), இவர் கடந்த 14 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ரேடியல் சாலை சென்னை ஒன் கம்பெனி அருகே சென்று கொண்டிருந்த போது, ஆட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு பல ஏடிஎம் மையங்களுக்கு சென்று, 9500 ருபாய் பணத்தையும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் பள்ளிக்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் நடராஜனிடம் அஜய் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் நட்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பள்ளிக்கரணை, ரேடியல் சாலை, திருநீர்மலை என பல்வேறு இடங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட குரோம்பேட்டையை சேர்ந்த சையத் அபுதாகிர்(18), பிரகாஷ் ராஜ்(22), பூபாலன்(23), சஞ்சய்(21), ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் பூபாலன் மற்றும் பிரகாஷ் இருவரும் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் உல்லாசமாக வாழ பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி செய்ததாக வாக்கு மூலம் அளித்தனர்.

கடன் வாங்க வைத்து வழிப்பறி:

அஜய் வங்கிக் கணக்கில் 3000 ரூபாய் தான் பணம் இருந்துள்ளது, மீதி பணம் நண்பரிடமிருந்தும், கடன் செயலி மூலமாகவும் பெற்று மொத்தம் 9500 ரூபாய் பணத்தையும் ஏடிஎம்மில் எடுக்க முடியவில்லை பின்னர் பணம் எடுக்க அங்கு வந்த ஒருவருக்கு அனுப்பி அவர் மூலம் எடுத்து பறித்துச் சென்றுள்ளனர்.

கருத்துகள் (0)

கருத்து பதிவிட உங்கள் மின்னஞ்சலை OTP மூலம் சரிபார்க்கவும்

முதல் கருத்தை நீங்களே பதிவிடுங்கள்!

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
ad